விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!

  சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!

   
சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து சிறப்பான படங்களை கொடுத்து வரும் நிலையில் வரும் 16ஆம் தேதி அவரது சைரன் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஜெயம் ரவி கேரியரில் பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு, சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துள்ளனர். படத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் கைதி என இருவேறு கெட்டப்புகளில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.

படத்தின் டிரைலர், டீசர், பாடல்கள் ஆகியவை முன்னதாக வெளியாகி ரசிகர்களை கொண்டாட செய்துள்ளன. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களில் உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சைரன் படம் குறித்து மட்டுமில்லாமல் தான் அடுத்தடுத்து நடித்துவரும் பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் குறித்தும் அடுத்தடுத்த அப்டேட்களை ஜெயம் ரவி தெரிவித்திருந்தார். மேலும் தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ள தனி ஒருவன் 2 படம் குறித்தும் அவர் அப்டேட்டை பகிர்ந்திருந்தார்.

நடிகர் ஜெயம் ரவி: கோலிவுட்டில் மினிமம் கேரன்டி ஹீரோவாக அதிகமான காலங்கள் தன்னுடைய சினிமா கிரியரை மிகவும் சிறப்பாக மெயின்டெயின் செய்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவரது அனைத்து படங்களுமே ஏதோ ஒரு மெசேஜை ரசிகர்களுக்கு கொடுக்கும் வகையில் அமைந்து வருகின்றன. சில படங்களில் காமெடியை அதிகமாக கொடுத்து தனக்கு காமெடியும் சிறப்பாக வரும் என்பதை நிரூபித்துள்ளார் ஜெயம் ரவி. அந்த வகையில் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்கள் இவரது கேஷுவல் காமெடிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளன. கடந்த ஆண்டில் ஜெயம் ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.

சைரன் படம்: இருந்தபோதிலும் இறைவன் படம் கலவையான விமர்சனங்களையே பெற முடிந்தது. சைக்கோ திரில்லர் ஜானரில் வெளியான இந்தப்படம் ரசிகர்களின் அதிகமான எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியாகி அவர்களை கவரத்தவறியது. இந்நிலையில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே ஜெயம் ரவி நடிப்பில் சைரன் படம் தற்போது வெளியாக உள்ளது. வரும் 16ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் படத்திற்கான பிரமோஷனை மிகப்பெரிய அளவில் படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

அடுத்தடுத்த பிரமோஷன்கள்: சைரன் படத்தில் ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்துமே கலவையாக இருக்கும் என்று முன்னதாக பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி தெரிவித்திருந்தார். அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து ஆண்டனி பாக்யராஜை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று முன்னதாக ஜெயம் ரவி, படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் அவருக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இந்த படத்தில் யோகி பாபு மற்றும் சமுத்திரக்கனி, கீர்த்தி சுரேஷ் என ஒவ்வொருவரும் தங்களது கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சைரன் படத்தின் சென்சார் நிறைவு: இந்நிலையில் படத்தின் சென்சார் தற்போது நிறைவடைந்துள்ளது. படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தில் கைதியாகவும் ஜெயம் ரவி நடித்துள்ள நிலையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இன்னும் சில தினங்களில் வெளியாகும் சைரன் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் முன்னதாக மெலடியில் இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் 3வது பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Related News