சர்சையைக் கிளப்பிய வெப்சீரிஸ்         மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு         மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      தடையை தாண்டி பிகில் வெளியாகுமா ?

  தடையை தாண்டி பிகில் வெளியாகுமா ?

   
தடையை தாண்டி பிகில் வெளியாகுமா ?

அமைச்சர்களின் பதிலுக்காக காத்திருக்கும் விஜய் !!!

அரசியல் வாதிகளுக்கும் நடிகர் விஜய்க்கும் ஏழாம் பொருத்தம் என்றே சொல்லலாம். அரசியல் வாதிகள் அமைதியாக இருந்தால் நடிகர் விஜய் அமைதியாக இருப்பதில்லை. நடிகர் விஜய் அமைதியாக இருந்தால் அரசியல் வாதிகள் அமைதியாக இருப்பதில்லை. இதற்கிடையே சிக்கித்தவிப்பது கட்சி தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் தான்.

சமீபத்தில் திரைக்கு வந்த சர்கார் படத்தில் தமிழக அரசு கொடுத்த விலையில்லா பொருட்களை விஜய்  தீயிலிட்டு கொளுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது. இதனை பார்த்த சிலர் டிக் டாக் வீடியோவில்  மடிக்கணிணி, ஃபேன், மிக்சி ஆகியவற்றை தூக்கிப் போடுவது போன்ற காட்சிகளை  வெளியிட்டு கொண்டிருந்தனர்.

இதனை கண்டு அதிருப்தியான கட்சி தொண்டர்கள் சர்கார் போஸ்டர் பேனர்களை அடித்து உடைத்தனர். மேலும் பிரச்சனை செய்ய கூடாது என்பதற்காக படத்தில் இருந்து அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. 

இந்த ஆண்டு தீபாவளிக்கு பிகில் படம் வெளியாகவுள்ளது. ஆனால், தணிக்கை குழு  படத்தை சென்சார் லிஸ்டிற்கே கொண்டு வரவில்லை என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இன்னும் இரண்டு வாரம் மட்டுமே உள்ள நிலையில் படக்குழுவிற்கு இது ஒரு சவாலாக அமைந்துள்ளது. 

பிகில் படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் நடிகர் விஜய் பேசியதின் பின்விளைவுதான் இது என்று பார்க்கப்படுகிறது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதற்காக நடிகர் விஜய், ரஜினியை நாடியுள்ளார், அனால் ரஜினி கை விரித்து விட்டாராம். விஜய் மற்றும் படக்குழுவினர் வேறு வழி இல்லாமல் அமைச்சர்களின் வீட்டு கதவை தட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாராம். 

" கட்சி தலைவர்கள் மனசு வைத்தால் மட்டுமே பிகில் படம் தீபாவளியன்று திரைக்கு வரும் என எதிர் பாக்கப்படுகிறது. "

Related News