வழக்கமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் 4 நிகழ்ச்சி கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது.
இதில் நடிகர் ஆரி அர்ஜூனன் டைட்டில் வின்னரானார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் தாக்கமும், ரசிகர்களுக்குள் ஏற்பட்ட சலசலப்புமே இன்னும் குறைந்தபாடில்லை. அதற்குள் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடங்குவதற்கான வேலை ஆரம்பமாகி விட்டது.
பிக்பாஸ் சீசன் 5க்கான ப்ரி புரடெக்ஷன் வேலைகள் தொடங்கிவிட்டது ஜூன் மாத இறுதியில் நிகழ்ச்சி தொடங்கும் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க சில போட்டியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவதாக தகவல் வெளியான நிலையில் உள்ளது.
இதனிடையே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வழக்கமாக அனைத்து சீசன்களிலும் இளம் நடிகைகள் பங்கேற்பது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் நடிகைகள் ஸ்ரீரெட்டி, பூனம் பஜ்வா, ராய் லக்ஷ்மி, சோனா ஆகியோரை பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்து வரலாம் என கூறப்படுகிறது.
இதேபோல் நடுத்தர வயது நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதும் வழக்கமாக உள்ள நிலையில் இம்முறை அந்த வாய்ப்பு நடிகை ராதா மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.
இதேபோல் நடிகர்கள் அதர்வா மற்றும் சித்தார்த் ஆகியோரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நடிகர் ராதா ரவி மற்றும் கரு பழனியப்பன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறை வழக்கம்போல விஜய் டிவியின் சில சொந்த நடிகர்களும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்றும் தெரிகிறது. அதன்படி குக் வித் கோமாளி போட்டியாளர்களே அதிகம் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. இந்த வரிசையில் அஸ்வின், ஷிவாங்கி மற்றும் விஜய் டிவி புகழ். ஆகியோர் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.