'பிக் பாஸ்' சீசன் 3-ல் வெற்றி பெற்ற முகென் ராவ், தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். மேலும் படத்தில் பல முன்னணி கதாபாத்திரங்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுமட்டுமில்லாமல் பல காதல் ஆல்பங்கள் செய்து பெண் ரசிகைகளை தன்னிடம் தக்கவைத்து கொண்டுள்ளார்.
இவர் யார் இயக்கத்தில் முதலில் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது முகென் ராவ் நடிக்கவுள்ள இந்த படத்தை ஸ்கைமேன் ஃப்லிம்ஸ் இன்டர்நேஷனல் படதயாரிப்பு நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.
படத்தின் தலைப்பு வேலன் என்று வைக்கப்பட்டுள்ளது பிரபல இசையமைப்பாளரான கோபி சுந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். சிறுத்தை சிவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கவின் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளார்.
கூடிய விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது படத்தில் பணியாற்றும் மற்ற கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.