பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தானா !         இவர்தான் விஜய்யின் மாஸ்டர் படத்தின் காட்சிகளை லீக் செய்தவரா ? வெளியில் வந்த உண்மை.         இணையதளத்தில் கசிந்த மாஸ்டர் காட்சிகள்         ரிலீசுக்கு முன்பே மாஸ்டர் படத்தின் புதிய சாதனை !         மாஸ்டர் படத்துக்கு டிக்கெட் வாங்கியாச்சா ?         அதிரடியாக விளையாடும் ஹவுஸ் மேட்ஸ் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்        
Home     News      அதிரடியாக விளையாடும் ஹவுஸ் மேட்ஸ் !

  அதிரடியாக விளையாடும் ஹவுஸ் மேட்ஸ் !

   
அதிரடியாக விளையாடும் ஹவுஸ் மேட்ஸ் !

    பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . ஒவ்வொரு வாரமும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு கொடுக்கப்படும் . அந்த வகையில் இந்த வாரம் கோழிப்பண்ணை டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் கோழி, நரி என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர் . இதில் கோழியின் முட்டையை நரிகள் தொடவேண்டும், நரிகளின் வாலை கோழிகள் பிடிக்க வேண்டும் . இறுதியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும் .

இந்த டாஸ்க் கை ஹவுஸ்மேட்ஸ்கள் மிக அதிரடியாக விளையாடி வருகின்றனர். இன்றைய முதல் புரோமோ வில் பாலா ஷிவானியின் முட்டையை தொட்டுவிட்டதாக கூறுகிறார் .

ஆஜித்தின் முட்டையை தொடுவதற்கு நரிக்கூட்டம் முயற்சிக்கிறது. மேலும் ஆரியிடம் அனிதா, ரம்யா மற்றும் அர்ச்சனா ஆகியோர் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்கின்றனர் .

 புரோமோவின் இறுதியில் அர்ச்சனா 'தரமான சம்பவம் இருக்கு' என்று கூறுகிறார். இதனால் அர்ச்சனா டீமில் உள்ளவர்கள் மட்டுமல்லாது போட்டியாளர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் டாஸ்க்காக இது அமைந்துள்ளது .

இறுதியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு எப்படிப்பட்ட ஸ்பெஷல் பவர் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related News