ஆரியை பழிதீர்க்க பாலாஜி எடுத்த ஆயுதம் !         அர்ச்சனாவை கலாய்த்து சுரேஷ் சக்ரவர்த்தி !         ஷிவானிக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த பாலாஜி         டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !         மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்         லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?        
Home     News      பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்

  பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்

   
பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் இருக்கின்றார்கள். செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பின்னர் காப்பான் சர்க்கார் தர்பார் போன்ற பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளமும் இருந்தது இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இடம் இவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே இவர் சுரேஷ் சக்ரவர்த்தியிடம் அடிக்கடி முட்டிகொண்டே வந்தார். சுரேஷ் சக்ரவர்த்தி விவகாரத்தில் அனிதா சம்பத்தின் பெயர் கொஞ்சமாக டேமேஜ் அடைய துவங்கியிருக்கிறது. இந்நிலையில் அனிதா சம்பத்தின் அடுத்த பஞ்சாயத்து துவங்கி இருக்கிறது.

தற்போது பிக்பாஸ் வீட்டில் பாத்ரூமுக்குள் அமர்ந்து அனிதா சம்பத் தேம்பி தேம்பி அழுத சம்பவம் ஹவுஸ்மேட்ஸ்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து ஒரு வழியாக நிஷாவின் கோரிக்கையை ஏற்று கதவை திறந்த அனிதா, மொட்டை சுரேஷ் என்னை கன்டென்ட்டுக்காக பயன்படுத்தி கொள்கிறார். நான் சாரி சொன்னால் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே. சனம் வாடா போடா என்றெல்லாம் பேசினார். அவக்கிட்ட மட்டும் பேசுகிறார். நான் என்ன அவ்வளவு மோசமாகவா நடந்துகொண்டேன் என்று சோகத்துடன் கேட்டுள்ளார்.

இதனால் இந்திய அளவில் அனிதா சம்பத் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனார். சில நெட்டிசன்கள் அவரை அடுத்த ஜூலி எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related News