பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை சனம் ஷெட்டி. இவர் பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர் தர்ஷன் அவரது முன்னாள் காதலி ஆவார். நிகழ்ச்சியில் யாருடனும் கூட்டணி சேராமல் தனி ஆளாக கேமை விளையாடி வந்தார். இவர் திடீரென்று வீட்டை விட்டு வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் அவனைவரின் கவனித்திரற்கு உள்ளானவராக தன்னை தானே மாற்றிக்கொண்டார் சனம் ஷெட்டி.
இவர் தற்போது காதலர் தினத்தன்று புதிய காதலனுடன் இருப்பதை போல் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளிட்டுள்ளார். இதற்கு பல தரப்பினரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.