மீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா !         பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி         பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி !         இவர்தான் விஜய்யின் மாஸ்டர் படத்தின் காட்சிகளை லீக் செய்தவரா ? வெளியில் வந்த உண்மை.         அதிரடியாக விளையாடும் ஹவுஸ் மேட்ஸ் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      மனவேதனையில் குமுறிய பாலாஜி !

  மனவேதனையில் குமுறிய பாலாஜி !

   
மனவேதனையில் குமுறிய பாலாஜி !

பிக்பாஸ் வீட்டில் தொடங்கிய ஃபிரீஸ் டாஸ்கில் முதல் நபராய் ஷிவானியின் அம்மா அகிலா வந்துள்ளார் . அந்த நேரத்தில் ஷிவானி பாத்ரூமில் இருந்தார். அப்போது அவருக்கு பிக்பாஸ் ஃபிரீஸ் சொல்ல, அவரது மூக்கையில் மையை வைத்து விளையாடியிருக்கிறார் பாலாஜி.

அந்த வேளையில் சிறுத்தை படத்தில் இடம்பெற்ற ஆராரோ ஆரிராரோ பாடல் ஒலித்தது. அந்த பாடலை கேட்டு அழுது கொண்டே நின்றார் ஷிவானி. இதன்போது செம்மயாக என்ட்ரி கொடுத்தார் ஷிவானியின் அம்மா அகிலா.

இதில் அம்மாவை கண்டதும் ஓடி வந்து கட்டியணைத்து கண்ணீர் விட்டார் ஷிவானி. ஆனால் , ஷிவானியின் அம்மா அடிக்காத குறையாக அவரை திட்டி தீர்த்தார். கார்டன் ஏரியாவில் உள்ள சோஃபாவில் அமர்ந்து தனது மகளுடன் விவாதிக்க தொடங்கிய அவர் எதுக்குடி இங்க வந்த? என்ன பண்ணிட்டு இருக்க? நீ என்ன பண்றனு யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கியா? எல்லாரும் எதுக்கு வந்திருக்காங்க? நீ எதுக்கு வந்திருக்க?

ஒருத்தன் பின்னாடி சுத்தவா வந்திருக்க என்று கேட்டு கிழித்து விட்டார். அப்போது என்ன அம்மா இப்படி பேசுறீங்க என்று கண்கலங்கியபடியே ஷிவானி கேட்க.. மீண்டும் கொதித்த அவரது அம்மா, வாயை மூடு.. வர கோபத்திற்கு அறைஞ்சுடுவேன் என்று கொந்தளித்தார் .

இதை தொடர்ந்து  பிக்பாஸ் வீட்டில் வந்துள்ள ஷிவானியின் அம்மா அகிலா தன் முகத்தைக்கூட பார்க்காமல் ரைடு விட்டதை எண்ணி தாரை தாரையாய் கண்கலங்கி கொண்டுள்ளார் பாலாஜி. இதில் லிவிங் ஏரியாவில் தனியாக அமர்ந்து தாரை தாரையாய் கண்ணீர் சிந்தினார் பாலாஜி. 

அப்போது அங்கு வந்த ஆஜித் எல்லாம் ஓகே தானே என்று கேட்க ஓகே என தலையை அசைத்த பாலா, அவங்க அம்மாவே வந்து அப்படி பண்ண இப்படி பண்ணனு குறை சொல்லும் போது அதுல நானும் சம்பந்தப் பட்டிருக்கேன் என்று கூறுகிறார் .

Related News