பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற கேப்டன்ஷிப் டாஸ்க்கில் தனது தோல்விக்கு காரணமாக இருந்த ஆரியை பழிவாங்கும் வகையில் இன்று அவர் கால் சென்டர் டாஸ்க்கில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யாரையும் காலி செய்யாமல் விளையாடுங்கள், எல்லோரும் சேர்ந்து விளையாடுங்கள் என்று கூறும் ஆரி, யாரையும் காலி செய்யவில்லையா? என்று முதல் கேள்வியை எழுப்பிய பாலாஜி அதன் பின்னர் நான் நல்லவன் என்று சொல்பவனை நம்பலாம், நான் கெட்டவன் என்று சொல்பவனை கூட நம்பலாம், ஆனால் நான் மட்டுமே நல்லவன் என்று சொல்வதை நம்ப முடியாது' என ஆரியை குத்தி கேள்வி கேட்கும் பாலாஜியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கால் சென்டர் டாஸ்க் ஆரம்பிக்கும் பாலாஜி, 'நான் உங்கள் மிகப்பெரிய ஃபேன், ஆனால் இங்கே அல்ல, வீட்டுக்கு வெளியே என்று கூறியதும் ஆரியை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கியது. கேப்டன் டாஸ்க்கில் தன்னை தோற்கடித்த ஆரியை பழிவாங்கும் வகையில் இன்றைய கால்சென்டர் டாஸ்க்கில் பாலாஜியின் உரையாடல் இருந்ததாக தெரிகிறது
#Day58 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/umswACEeWZ
— Vijay Television (@vijaytelevision) December 1, 2020