மலையாளத்தில் நடிகர்கள் பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் இயக்குனர் சஷி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் ஐயப்பனும் கோஷியும். இப்படம் வசூல் ரீதியாகவும், திரைக்கதை ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. காரணம் இதன் காட்சியமைப்பு, கதைக்களம், கதாபாத்திரங்களின் எதார்த்த நடிப்பும் ஆகும்.
இந்நிலையில் தற்போது ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கவுள்ளதாகவும், இதில் சசிகுமார் மற்றும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிவுள்ளதாகவும் ஆங்காகே பேசப்பட்டு வருகிறது.
ஐயப்பனும் கோஷியும் இயக்குனர் சஷி சில மாதங்களுக்கு முன்பு இடுப்பு மாற்று அறுவைசிகிச்சை பலனின்றி காலமானார் என்று குறிப்பிடத்தக்கது.