ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் உருவான 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்'.
பூர்விக அமெரிக்கர்களுக்கு எதிரான படம்' என்ற இனவெறி சர்ச்சையால், அதனை புறக்கணிக்குமாறு எதிர்ப்பு கிளப்பியுள்ள நிலையிலும்,
6 நாட்களில் மட்டும் ரூ.5,000 கோடி வசூலை தாண்டி சாதனைப் படைத்துள்ளது.
450 மில்லியன் அமெரிக்க டாலரில் உருவான இந்தப் படம், 6 நாட்களிலேயே, 550 மில்லியன் அமெரிக்க டாலரை வசூல் செய்துள்ளது, ஹாலிவுட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனா, தென்கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வசூல் மழை பொழிந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய அளவில் 200 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் நெருங்கியுள்ளது.