Home     News      அட்லீ சுட்ட அடுத்த கதை

அட்லீ சுட்ட அடுத்த கதை

அட்லீ சுட்ட அடுத்த கதை

அட்லீ(Atlee) படம் இயக்கினாலே அந்த கதை பற்றி எதாவது சர்ச்சைகள் தொடர்ந்து வரும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். தற்போது விஜய்யை(Vijay) வைத்து அட்லீ கால்பந்தாட்ட பின்னணியில் தளபதி 63(Thalapathy 63)  படத்தை, பலகோடி செலவில் செட் போட்டு  இயக்கி வருகிறார். இந்நிலையில் படக்குழுவினருக்கு ஒரு அதிர்ச்சி தகவல், என்னவென்றால் ? இந்த கதை நான் இயக்கிய குறும்படம் என்றும் , அதன் மைய கருவை தான் இப்போது அட்லீ திருடி தளபதி 63 என்ற படத்தை  இயக்கி வருகிறார் என  ஒரு இயக்குனர் குற்றம்சாட்டியுள்ளார்.

சிவா என்ற குறும்பட இயக்குனர் தான் பெண்கள் கால்பந்து மையமாக வைத்து ஒரு படம் இயக்கியுள்ளார். ஆகவே எனது  குறும்படத்தை வைத்து தான் தளபதி63 கதை உருவாக்கியுள்ளார் என தெரிவித்து வருகிறார்.

தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் நீதிமன்றத்திலும் இதுபற்றி புகார் அளிக்கவுள்ளாராம்.  

Related News