புதுச்சேரியில் தனுஷ் பேனருக்கு பீர்- பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்!         தீபிகா படுகோனே மருத்துவமனையில் அனுமதி         பிக் பாஸ் தமிழ் 6 நிகழ்ச்சியின் ஆரம்ப தேதி அறிவிப்பு         2020ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது - மத்திய அரசு அறிவிப்பு         தமிழ் சினிமாவில் கடந்த வாரம் வெளியான அனைத்து படங்களும் படுதோல்வி         சிவப்பு நிற உடையில் மின்னும் நடிகை ஐஸ்வர்யா ராய்!         மாவீரன், கேப்டன் மில்லர் படத்தை அதிக தொகைக்கு வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்..         பொன்னியின் செல்வன் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமானது...         விக்ரமின் கோப்ரா - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு         அட்லீயின் ஜவான் படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.         மலையாளத்தில் மீண்டும் மாளவிகா மோகன் !!!         பிரம்மாண்ட செட்; வேகமெடுக்கும் தனுஷ் படக்குழு         அஜித்தின் ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!         பிரபல காமெடி நடிகரின் ஹோட்டலில் ரெய்டு         95வது ஆஸ்கர் விருது விழா; இந்திய சார்பில் போட்டியிடும் படம் அறிவிப்பு         அஜித்தின் ஏகே61 படத்தின் தலைப்பு இதுவா?         தனுஷுக்கு ஜோடியான பிரியங்கா மோகன்         பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது         கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷின் புதிய லுக்        
Home     News      14 வருஷத்துக்கு பின் மீண்டும் இணையும் ‘அப்படிப்போடு’ காம்போ.. லோகேஷ் படத்தில் விஜய் உடன் ஜோடி சேரும் திரிஷா

  14 வருஷத்துக்கு பின் மீண்டும் இணையும் ‘அப்படிப்போடு’ காம்போ.. லோகேஷ் படத்தில் விஜய் உடன் ஜோடி சேரும் திரிஷா

   
14 வருஷத்துக்கு பின் மீண்டும் இணையும் ‘அப்படிப்போடு’ காம்போ.. லோகேஷ் படத்தில் விஜய் உடன் ஜோடி சேரும் திரிஷா

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. வம்சி இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகாவும், வில்லனாக பிரகாஷ் ராஜும் நடித்து வருகின்றனர். மேலும் ஷியாம், சம்யுக்தா, பிரபு, குஷ்பு, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. வாரிசு படத்தில் நடித்து முடித்த பின்னர் நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடிக்கும் நடிகர்கள் தேர்வும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் கதைக்களம் மும்பையை மையமாக வைத்து உருவாகி உள்ளதாகவும், இதில் விஜய்க்கு வில்லனாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது வரை பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் பிரித்விராஜ் மற்றும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஆகிய மூன்று பேர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாவிட்டதாம். எஞ்சியுள்ள மூன்றுபேர் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. அதேபோல் இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருப்பதாகவும், அதில் ஒன்றில் சமந்தா நடிப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது அந்த இரண்டாவது ஹீரோயின் யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை திரிஷா தான் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்குமுன் கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள திரிஷா இதன்மூலம் 5-வது முறையாக கூட்டணி அமைக்க உள்ளாராம்.

Related News