Home     News      மன்னிப்பு கேட்டு வீடியோவை வெளியிட்ட ஆடை இயக்குநர்

  மன்னிப்பு கேட்டு வீடியோவை வெளியிட்ட ஆடை இயக்குநர்

   
மன்னிப்பு கேட்டு வீடியோவை வெளியிட்ட ஆடை இயக்குநர்

சமீபத்தில் ஆடை படத்தின் டீசர் வெளியானது, டீசரில் அமலாபால் ஆடையின்றி நடித்துள்ள ஒரு காட்சியும் வெளியானது. டீசர் வெளியாகிய  சிறிது நேரத்தில் மீம் கிரியேட்டர்கள் அமலாபால் ஆடையின்றி தோன்றிய காட்சியை வடிவேலு புகைப்படத்துடன் இணைத்து சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்தனர். 

aadai 2nd look

தற்போது எந்த படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லர் ரீலீஸ் செய்தலும் அதற்கு ஏற்ப நகைச்சுவை நடிகர்களின் காமெடி காட்சியை அத்துடன் இணைத்து மீம் கிரியேட்டர்கள் இணையதளத்தில் ட்ரெண்ட்  செய்து வருகிறார்கள். நகைச்சுவை நடிகர்களின் வரிசையில் வடிவேலுவின் காமெடி காட்சி அனைத்து படத்திற்கும் பொருந்தும் வகையில் உள்ளது. ஆடை படத்தின் டீசர் முழுவதையும் வடிவேலு வெர்ஷன்நாக மாற்றி அமைத்துள்ளனர். 

ஆடை படத்தின்  இயக்குநர் ரத்னகுமார், வடிவேலு வெர்ஷன் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததோடு மட்டும்மல்லாமல், இப்போதெல்லாம் ஒவ்வொரு திரைப்படைப்புக்கும் வடிவேலு வெர்ஷன் வந்துவிடுகிறது. ஆடை படமும் விதிவிலக்கல்ல. இந்த வீடியோ மிகவும் நகைச்சுவையாக உள்ளது. இந்த வீடியோவை பகிர்வதிலிருந்து என்னை நானே கட்டுப்படுத்த முடியவில்லை. ஆடை படம் சுதந்திரமாக பேசப்போகிறது என்பதால். இந்த "பேச்சு சுதந்திரத்தை" நான் மதிக்கிறேன் என்று கூறியுள்ளார் இயக்குநர் ரத்னகுமார். மேலும் அவர் பகிர்ந்த அந்த வீடியோவிற்க்காக அமலாபாலிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். 

rathna kumar
 

Related News