நடிப்பிலிருந்து விலகுகிறேன்" - நடிகர் ஆமீர் கான் திடீர் முடிவு         வடிவேலுவின் நாய் சேகர் படத்திலிருந்து பாடல் வெளியீடு         லவ் டுடே' படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு         23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி         அஜித்தின் 62வது  படத்தில் ஜி.பி.முத்து         ‘வாரிசு – துணிவு’ எந்த படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்படும்?         வசூல் மழையில் ‘லவ் டுடே’ திரைப்படம்         நாக சைத்தன்யாவுடன் மீண்டும் இணையும் சமந்தா        
Home     News      அஜித்தின் ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

  அஜித்தின் ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

   
அஜித்தின் ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகர் அஜித் நடித்துள்ள 61-வது படத்துக்கு ’துணிவு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘வலிமை’. இப்படத்தில் பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற்று ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்துள்ள படம் "ஏகே61". இதில் நடிகை மஞ்சு வாரியர்  கதாநாயகியாக நடிக்கிறார் அஜித் சமீபத்தில் அகில இந்திய பைக் பயணத்தை தொடங்கினார். அவருடன் நடிகர்கள் மஞ்சு வாரியர், பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோரும் சென்றனர்.

 அஜீத் வட இந்தியாவில் ஜாலியாக பைக் பயணம் செய்து மகிழ்ந்த பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏகே61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  

இந்தநிலையில் அஜித்தின் 61வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணிவு என்பது படத்தின் தலைப்பு. அஜித்தின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெள்ளை முடி மற்றும் தாடியுடன் காட்சியளிக்கிறார்

Related News