மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      அஜித் நடித்த விஸ்வாசம் படம் TRP ரேட்டிங்கிலும் புதிய சாதனை !

  அஜித் நடித்த விஸ்வாசம் படம் TRP ரேட்டிங்கிலும் புதிய சாதனை !

   
அஜித் நடித்த விஸ்வாசம் படம் TRP ரேட்டிங்கிலும் புதிய சாதனை !

தமிழ் சினிமாவில் 2019ல் வெளியான விஸ்வாசம்( Viswasam ) படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது மட்டுமல்லாமல் TRP ரேட்டிங்கிலும் புதிய சாதனை படைத்துள்ளது. பிரபல இயக்குனர் சிவா, இயக்கத்தில் அஜித், நயன்தாரா, விவேக், கோவை சரளா, ரோபோ சங்கர், தம்பி ராமையா உட்பட பலர் நடிப்பில் கடந்த பொங்கல் அன்று வெளியான படம் ‘விஸ்வாசம்'.

மே 1 தல அஜித் (Ajith) பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் பொங்கல் அன்று வெளியான  ‘விஸ்வாசம்' படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 18,143 இம்ப்ரெஸ்சன் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இதற்கு முன் TRP ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருந்த விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான " பிச்சைக்காரன் " படம்.  17,696 இம்ப்ரெஸ்சனுடன்  இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது , மற்றும் மூன்றாவது இடத்தில் பாகுபலி 2, நான்காவது இடத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் படம் 16 ஆயிரத்தி 906 இம்ப்ரெஸ்சனும் பெற்றுள்ளது. 

கடந்த பொங்கல் அன்று சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில்  பேட்ட படம் வெளியானது, இப்படத்துக்கு போட்டியாக தல அஜித் நடிப்பில் வெளிவந்த  ‘விஸ்வாசம்' படம் அனைத்து சாதனைகளிலும் முதல் இடத்தை பெற்றது. இதனை தொடர்ந்து 5 மாதங்கள் கழித்து இப்படம் Tv  யில் ஒளிபரப்பு செய்யப்பட்டது, அனைத்து வயதினரும் பார்க்கும் வகையில் இப்படம் இருப்பதால் TRP ரேட்டிங்கில் முதல் இடம் பெற்றுள்ளது. இது தல அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. 

Related News