எளிமைக்கு எடுத்துக்காட்டாக சில மனிதர்கள் உள்ளனர் ,அதிலும் சினிமா
உலகில் குறிப்பிட்டு சொன்னால் அதில் தல அஜித்தும் ஒருவர்,தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித்,இவர் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் வெளியாகவுள்ளது.
இவர் சினிமாவில் நடிப்பில் மட்டும் இல்லாமல், இவரின் தன்மையாலும்
போற்ற படுகிறார் .
நடிகர் அஜித் வெளியுலகிற்கு தெரியாமல் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அப்படி ஒரு முறை பல ஆண்டுகளுக்கு முன் செய்தியாளர் ஒருவருக்கு மருத்துவ உதவிக்காக குறிப்பிட்ட தொகை தேவைப்பட்டுள்ளது.
இதை கேள்விப்பட்ட அஜித் உடனடியாக அந்த தொகையை கொடுத்து உதவியுள்ளார். ஆனாலும், அந்த செய்தியாளர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
செய்தியாளரின் உடலை அவருடைய வீட்டிற்கு ஆம்புலன்சில் வைத்து எடுத்து சென்றுள்ளனர். அவருடைய வீடு முதல் மாடி என்பதால் அவருடைய நண்பர்கள் உடலை தூக்க செய்யும் பொழுது, அஜித்தும் அந்த செய்தியாளரின் உடலை தூக்கி சென்றுள்ளார்.
அந்த அளவிற்கு அஜித் பத்திரிகையாளர்களுடனும், செய்தியாளர்களுடனும் நட்போடு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.