துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.
AK62 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பிறகு சில காரணங்களால் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாகவும் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
மேலும் படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்றவுள்ளாராம்,அஜித்திற்கு வில்லனாக அருண் விஜய் நடிக்கவுள்ளதாகவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.