மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      இயக்குனர்களுக்கு அதற்கு பச்சை கொடி!!

  இயக்குனர்களுக்கு அதற்கு பச்சை கொடி!!

   
இயக்குனர்களுக்கு அதற்கு பச்சை கொடி!!

தமிழ் சினிமாக்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு கௌரவமான இடத்தை பிடித்திருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் ரசிகர்களுக்கு இவர் அறிமுகமானது கலைஞர் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட "மானாட மயிலாட" நிகழ்ச்சி சீசன் மூன்றில் தான், அதில் வெற்றி பெற்ற பிறகு தொகுப்பாளினியாக பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியின் "அசத்தப்போவது யாரு" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இவரின் குடும்பம் தெலுங்கு சினிமாக்களில் பெரும் புள்ளிகள் என்றாலும் இவர் முக்கியத்துவம் அளிப்பது தமிழ் சினிமாக்களுக்கே.

"நீதான் அவன்" என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்து இப்போது தமிழ் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக மற்றும் தங்கையாகவும் நடித்து வருகின்றார் இந்நிலையில் இவர் தனக்கென்று ஒரு அடையாளம் தேவை அதற்கு கவர்ச்சியும் தேவை என்பதால் அதை இப்போது ரசிகர்களுக்கு அளிக்க சம்மதம் தெரிவித்து, கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பல இயக்குனர்களுக்கும் கவர்ச்சி வேடங்களுக்கு பச்சை கொடி காட்டியுள்ளார். இதனால் ஐஸ்வர்யா நடிப்பில் வெளிவரப்போகும் திரைப்படங்களில் கவர்ச்சி அதிகமாகவே இருக்கும்.

இதற்கு ரசிகர்கள் மறுப்பு தெரிவித்து; முன்பைப் போல் திறமையை வைத்து முன்னேறுங்கள் உங்களுக்கு கவர்ச்சி வேடம் வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.

 

        View this post on Instagram                  

Wearing this lovely green outfit for #vaanamkottattum audio launch yest .. @madrastalkies Dress @the_loom_art Shrug @devrnil Styled by @malinikarthikeyan for @team___e Assisted by @vindhyakrishna_ @shreyaa.sanjay

A post shared by Aishwarya Rajessh (@aishwaryarajessh) on Jan 23, 2020 at 10:46pm PST

 

Related News