மகிழ் திருமேனி இயக்கவுள்ள ஏகே 62 படத்தின் அறிவிப்பிற்காக தான் அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்,
இப்படத்தை பற்றி எந்த தகவலும் வெளிவராத நிலையில் ,அஜித்துக்கு வில்லனாக நடிக்கப்போகிறவர் குறித்து தகவல் வெளியாகி வருகிறது.
அருண் விஜய் இப்படத்தில் வில்லன்களாக நடிக்கப்போகிறார் என கூறப்பட்டு வந்தது ,பின்பு அருள்நிதி இப்படத்தில் வில்லன்களாக நடிக்கப்போகிறார் என தகவல் வெளியாகி வந்தது.ஆனால், அவர்கள் இருவரும் இப்படத்தில் நடிக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சபைமத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்யாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.மேலும் இவர் வில்லனாக நடிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது,ஆர்யா மற்றும் அஜித் இருவரும் இணைந்து ஏற்கனவே நடித்த ஆரம்பம் படம் வசூல் மலை பொழிந்தது குறிப்பிடத்தக்கது.