நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் அக்டோபர் 19 வெளியான படம் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்து இருக்கும் லியோ படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான லியோ படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இன்றும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள "நா ரெடி" பாடலின் வீடியோ நேற்று வெளியானது.
இந்நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை லியோ படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'லியோ' திரைப்படம் வருகிற 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தியாவில் வெளியாகவுள்ளது. மேலும், 28-ஆம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/cine-news/news/ கிளிக் செய்யவும்.