Home     News      தமிழனுக்கு கிடைத்த வெற்றி...!

  தமிழனுக்கு கிடைத்த வெற்றி...!

   
தமிழனுக்கு கிடைத்த வெற்றி...!

தமிழனுக்கு கிடைத்த வெற்றி...!

தமிழனின் புகழ் உலகமெங்கும் ஒலிக்கும் என்பதற்கு சான்றாக அமைந்த பாடல் தான் மெர்சல் திரைப்படத்தின் ஆளப்போறான் தமிழன்... கடந்த வருடம் இயக்குனர் அட்லீயின்(Atlee) இயக்கத்தில், இசையமைப்பாளர் A.R ரஹ்மான்(A.R Rahman) இசையில் மற்றும் நடிகர் விஜய்யின்(Vijay) நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் "மெர்சல்". அத்திரைப்படத்தில் தமிழனின் புகழை பறைசாற்றும் வகையில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் இடம்பெற்று இருந்தது அப்பாடலின் வரிகள் விஜய் ரசிகர்கள் மற்றுமின்றி வேற்று மொழியினர்களையும் கவர்ந்துவந்தது.

இன்று 40 மில்லியன் பார்வையாளர் கொண்ட ஒரே தமிழ் பாடல் என்ற சாதனையும் படைத்துள்ளது. இதை அறிந்த விஜய் ரசிகர்கள் இணையதளம் மற்றும் பல சமூகவலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.. இப்பாடல் வரிகளை எழுதிய விவேக்கிடம் கேட்ட போது அவர் நான் எழுதியது வெறும் வரிகள் மட்டுமே இந்த வெற்றி எனக்கு உரியது அல்ல தமிழனுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்...

Related News