மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      கமல்ஹாசன் தீவிரவாதியா? என்று கேட்ட பிரபலம்!!!

  கமல்ஹாசன் தீவிரவாதியா? என்று கேட்ட பிரபலம்!!!

   
கமல்ஹாசன் தீவிரவாதியா? என்று கேட்ட பிரபலம்!!!

நடிகர் கமல்ஹாசன் இப்போது அரசியலில் அசத்தி வரும் இந்நிலையில் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் தீவிரவாதத்தை பற்றி பேசி, சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளார். இப்பேச்சானது இவரின் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு பெரிய வீழ்ச்சி என்று தான் கருதப்படவேண்டும், ஹிந்து மதம் அதிகம் இருக்கும் இந்தியாவில் இவர் கூறிய கருத்து தவறானதா? இல்லை சரியானதா? என்று தொண்டர்கள் பலரும் குழப்பத்தில் உள்ளனர். நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் பேசியது, "இந்தியாவின் முதல் தீவிரவாதி காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே ஹிந்து மதத்தை சார்ந்தவர்".  இவரின் இக்கருத்திற்கு இந்தியாவில் பா.ஜ.க கட்சியினர் மற்றும் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடனம், Bigg Boss, நடிப்பு என பல துறைகளில் கலக்கியவர்  மற்றும் முன்னாள் பா.ஜ.க கட்சியில் பணியாற்றி இப்போது விலகியுள்ள காயத்ரி ரகுராம் நேரடியாக நடிகர் கமலைத் தாக்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


காயத்ரி ட்வீட் செய்ததில் என்னையும் முதுகில் குத்த பலர் உண்டு அவர்களை நான் தீவிரவாதி என்று சொல்லலாமா? அவர்களில் நீங்களும் ஒருவர்தான் கமல்ஹாசன். கடந்த காலமெல்லாம் இந்தியாவின் முதுகில் குத்தியது காங்கிரஸ் கட்சியினர், அவர்களை நான் தீவிரவாதிகள் என்று கூறலாமா? இவ்வாறு ஊழல் மிகுந்த ஒரு கட்சியில் நீங்களும் இணையப்போகிறீர்களா கமல்? கட்சிக்குள் மதங்களை ஏன் கொண்டுவருகிறீர்கள்? என பல கேள்விகளை கேட்டுள்ளார் காயத்ரி. அதே சமயம் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பா.ஜ.க கட்சியினர்களை எதிர்த்தும் பேசியுள்ளார். 

Related News