Home     News      3 மாதம் பகல், 3 மாதம் இரவு கொண்ட அதிசிய தீவு!!!

  3 மாதம் பகல், 3 மாதம் இரவு கொண்ட அதிசிய தீவு!!!

   
3 மாதம் பகல், 3 மாதம் இரவு கொண்ட அதிசிய தீவு!!!

சூரியன் ஒரு நாள் அஸ்தமனம் ஆகாமல் இருந்தாலே அது மிகப்பெரிய அதிசயம் ஆனால்  மூன்று மாதம் சூரியன் அஸ்தமனம் ஆகாமல் இருக்கும் ஒரு அதிசிய தீவு நார்வே நாட்டில் உண்டு என்று சொன்னால் மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள். 
நம்புங்கள் அது உண்மையே! நார்வே நாட்டில் உள்ள  வெஸ்ட் ட்றோம்சோ(West Tromsø) என்ற தீவில் தொடர்ந்து 3 மாதம் சூரியன் உதித்த படியே இருக்கின்றதாம், இதனால் மக்கள் இந்த தீவை "கோடைத்தீவு" என்று அழைக்கின்றார்கள். இந்த பகல் காலம் என்பது மே 16-ஆம் தேதியில் இருந்து ஜூலை 26-ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர் மொத்தம் 69 நாட்கள். மேலும், நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை சூரியன் உதிக்காதாம். இந்த காலகட்டத்தை அவர்கள் "நீண்ட போலார் இரவுகள்" என்று கூறுகிறார்கள்.
நார்வே நாட்டு மக்கள் இந்த தீவில் சுமார் 300 மக்கள் இருக்கின்றார்கள். அவர்கள் நார்வே அரசாங்கத்திற்கு இந்த தீவை கால நேரம் அற்ற தீவு என்று அறிவிக்க வேண்டும் என கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர் இதனால் இந்த தீவு மக்களுக்கு பள்ளி,கல்லூரி மற்றும் அலுவுலக பணியாளர்களுக்கு தளர்வு கிடைக்கலாம்.

Related News