மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      இனிமேல் 24-மணி நேரமும் தல & தளபதி தான்!!!

  இனிமேல் 24-மணி நேரமும் தல & தளபதி தான்!!!

   
இனிமேல் 24-மணி நேரமும் தல & தளபதி தான்!!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தை அமைத்திருக்கிறார். மற்ற நடிகரை போல விளம்பரங்களில், பாராட்டு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழாக்கள் எதிலும் பங்கேற்காத நடிகர் அஜித் அவர்களின் ரசிகர்கள் மத்தியில் கடவுளாகவே பார்க்கப்படுகிறார். அவரை திரையரங்குகளில் பார்த்தால் மட்டும் போதும் வேறெதுவும் வேண்டாம் என்று மன்றாடும் இவரின் ரசிகர் பட்டாளத்திற்கு ஒரு பெரிய விருந்தளிக்கும் வகையில் வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி அன்று வெளிவர போகும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் தமிழகத்தில் 24-மணி நேரமும் திரையரங்குகளில் காண்பிக்கப்படும்.

எப்படி? என்ற ஆச்சர்யம் அனைவருக்கும் இருக்கும், தற்போது திரைப்படங்களை 24-மணி நேரமும் திரையிடலாம் என்று சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தோசத்தின் உச்சத்தில் இருக்கும் சினிமா ரசிகர்களும், நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை எதிர்நோக்கி இருக்கும் அஜித் ரசிகர்களும் வசூல் வேட்டையை தொடங்க இருக்கும் திரையரங்க உரிமையாளர்களும். இதனால் இத்திரைப்படம் வசூலில் சாதனை செய்ய பல வாய்ப்புள்ளது மேலும் சர்கார் திரைப்படத்தின் ஒரு நாள் வசூலை முறியடிக்குமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 

Related News