அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.துணிவு' வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட படமாக உருவாகியுள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் 'வாரிசு' படத்துடன் மோதவுள்ளதால், இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள். இதில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், ஜி.எம்.சுந்தர் மற்றும் அஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
'துணிவு' திரைப்படம் சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்டு, யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இதனை அஜித் இடம்பெறும் அசத்தலான போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் படக்குழுவினர்.
'துணிவு' படத்தில் தணிக்கையின் போது 13 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆம், கிட்டத்தட்ட 13 கெட்ட வார்த்தைகள் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
மேலும் வட இந்தியர்களை வடக்கன்கள் என ட்ரோல் செய்யும் டயலாக் ஒன்றும் தணிக்கையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.