தமிழ் சினிமாவின் மாஸ் கமெர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான ஹரி இயக்கத்தில், மாஸ் ஹீரோ அருண் விஜய்யின் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் 'யானை'. பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், ராஜேஷ், அம்மு அபிராமி, போஸ் வெங்கட் என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். முதல் முறையாக ஹரி - அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள 'யானை' திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். அத்தகைய எதிர்பார்ப்பை, இப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க பார்க்கலாம்..
கதைக்களம்
ஊருக்குள் கௌரமாக வாழ்ந்து வரும் பிஆர்வி குடும்பத்தின் இளைய மகனாக வரும் ரவி { அருண் விஜய் }, குடும்பத...