விஷ்ணு விஷால் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் ராம்குமார் கூட்டணி இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஷெட்யூல்கள் முடிந்த நிலையில், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. விஷ்ணு விஷால் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இது தொடர்பான தகவலை பதிவட்டுள்ளார்.
அதில், "விஷ்ணு விஷால் 21 படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது. பணியில் இயக்குனர் ராம்குமார் உடன் எதிர்பாராததை எதிர்பாருங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார். இம்முறை படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெறுகிறது. மேலும் ...